Sunday, September 4, 2011

அரசு கேபிள் வந்தது… DTH வளருது.



இப்போது தெருக்கள் அமைதியாக இருக்கிறது. சாத்திய ஜன்னல் வழியாக கசிந்து கொண்டிருக்கும் டீ.வி.யின் அலறல்கள் இல்லை. படபடப்பில்லாமல் சமையல் வேலைகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் பார்வை குறைபாடு மெல்ல மெல்ல நீங்கி வருவதாக தகவல். விருந்தினர்கள் முழு மனதோடு உபசரிக்கப் படுகிறார்கள். சரியான நேரத்துக்கு சாப்பிடமுடிகிறது.


இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது.

இந்த மக்கள் மீது அம்மா அரசு கொண்டுள்ள அக்கறையின் விளைவாகதான் இந்த மாற்றங்கள் என்று சொன்னால் மிகையில்லை. குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் தொடங்கப் பட்டதிலிருந்து மக்கள் டீ.வி யை மூடிவிட்டார்கள். மாற்றங்கள் படிப்படியாக வரத் தொடங்கி விட்டன. ஒரு குடும்பத்தின் ஏகாதிபத்தியத்தை அப்புறப்படுத்தி பல்லாயிரம் குடும்பங்களுக்கு நிம்மதி கிடைக்க வழி வகுத்திருக்கிறது இந்த அரசு.

1 கோடியே 45 இலட்சம் இணைப்புகள் கொண்ட 34,344 ஆபரேட்டர்கள் அரசுடன் இணைந்து இந்த சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் 8 எம்.எஸ். ஓ களின் 400 ஆபரேட்டர்கள் தங்களது 75 ஆயிரம் இணைப்புகளோடு ஜோதியில் கலந்திருக்கிறார்கள். மாவட்டத்தில் ஒளிபரப்பாகும் 60 சானல்களில் 12 உள்ளூர் சானல்கள். 10க்கும் மேற்பட்ட மலையாள சானல்கள். 20 பிறமொழி சானல்கள். பெரும்பாலானவை ஒரு துணுக்கை ஜவ்வாக இழுத்து 24 மணி  நேரமாகக் காட்டும் செய்தி சானல்கள். இன்னும் பாதி சினிமா இசை…

விருப்பமில்லா சானல்களை வலுக்கட்டாயமாக திணித்து இவைகளுக்கு 70 ரூபாய் கட்டணமா என்று இப்போது கேட்க முடியாது.
கட்டண சானல்கள் ‘விரைவில்’ வரப் போகிறதாம். அந்த விரைவு எப்போது என்று தெரியாததால்  வினையை விலை கொடுத்து வாங்குவது மாதிரி DTH சேவையை நாடி அவசர அவசரமாக நகர்வோரை என்ன செய்வது. இவர்கள் அரசுக்கு ‘மாதத்துக்கு 60 கோடி வாருவாயை’ வர விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஒருவேளை ஏகபோகமாய் சம்பாதிக்க  அரசு மறைமுகமாக DTH  நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறதோ என்னவோ..?

5 பகிர்வுகள்:

இந்திய அரசியல் எனக்கு எப்பவுமே புரியாதுங்கோ!!!

அம்மாவ பத்தி உங்களுக்கு தெரியாததா, அவிங்க பிடிச்ச முசலுக்கு இரண்டே கால் தான்

//இந்திய அரசியல் எனக்கு எப்பவுமே புரியாதுங்கோ!!!//
அது எங்களுக்கும் இன்னும் புரியலீங்கோ

//அம்மாவ பத்தி உங்களுக்கு தெரியாததா, அவிங்க பிடிச்ச முசலுக்கு இரண்டே கால் தான்// ஆமாமா.. இரண்டே கால்தான்.

//இப்போது தெருக்கள் அமைதியாக இருக்கிறது. சாத்திய ஜன்னல் வழியாக கசிந்து கொண்டிருக்கும் டீ.வி.யின் அலறல்கள் இல்லை. படபடப்பில்லாமல் சமையல் வேலைகள் நடைபெறுகின்றன. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் பார்வை குறைபாடு மெல்ல மெல்ல நீங்கி வருவதாக தகவல். விருந்தினர்கள் முழு மனதோடு உபசரிக்கப் படுகிறார்கள். சரியான நேரத்துக்கு சாப்பிடமுடிகிறது.//

எல்லாம் நன்மைக்கே!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More