குளம் அம்மம்மான்னு நிறஞ்சு கிடக்கு. நாளைக்குள் மறுகால் பாய்த்துவிடும். பிறகு அருவியாய் கொட்டும் அந்த நீரில் கொட்டமடிக்க பெருங்கூட்டம் வந்துவிடும். பகல் வேளையில் நாலைந்து பேர்தான் குளித்துக் கொண்டிருந்தார்கள். உயர்ந்த கரைகளுக்கு நடுவில் தாழ்வாய் ‘ப’வடிவத்தில் மறுகால் பாய கல்பதிக்கப்பட்ட சமதளம். குளிக்கிற இடம்.
பரந்து விரிந்து கிடக்கிற குளத்தைப் பார்த்தாலே குளிக்க ஆசைவரும். சரி வந்துவிட்டு போகட்டும். நான் மட்டும் போயிருந்திருக்க வேண்டியதுதானே. மகனுக்கு இரண்டு வயதாயிருந்தபோது அவனையும் கூட்டிக்கொண்டு போனேன். அந்த வயதிலேயே நீச்சல் கத்துகுடுக்கனும்னு.[சின்ன வயசிலே அவனை சகலகலா மன்னனாக்கிவிடத் துடிக்கும் புது பெற்றோனின் ஆர்வத்துடன்]
பய தண்ணியப் பார்த்ததும் குதிக்க ஆரம்பிச்சான். கழுத்தளவு தண்ணி. கைக்கு எட்டுகிற சமதளம் கரை. குளத்தில் இறங்கி அவனை தூக்கிப் பிடித்து ரெண்டு சுற்று. கையை காலை ‘தத்தக்கா பித்தக்கா’ என்று அடித்தான். தண்ணீர் சிதறி வாய்க்குள் போக.. மூச்சு திணற விக்கினான். கரையில் உட்கார வைத்தேன். படிப்படியாதான் எல்லாத்தையும் படிக்க குடுக்கணும். சோப்புப் பெட்டியை எடுத்துவைத்துக் கொண்டு விளையாடினான்.
குளத்தில் குளிப்பது அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். சுகம். அதில் நீச்சலடித்துக் குளிப்பது பரமசுகம். உடம்பு முழுதும் நீருக்குள் விழுந்துகிடக்க உஷ்ணம் மறந்து குளுமை பரவிவிடும். புத்துணர்ச்சியாகிவிடும்.
அந்த சுகத்தை அனுபவித்து… ஒரு முங்கு போட்டுவிட்டு திரும்பிப் பார்த்தால் கரையில் விளையாடிக் கொண்டிருந்த பயலை காணோம் .திடும் என அதிர்ச்சி. மூச்சே நின்று விடும் போல் இருந்தது. பக்கத்தில குளிச்சிட்டு நிக்கிற எவனும் பார்க்கவில்லையாம். எழுந்து ஓடிவிட முடிந்தவனா.. இங்கதான் தண்ணிக்குள்ள எங்கயோ… பதட்டத்துடன் காலால் தண்ணிக்குள் துழாவா.. பாவி மக்கா.. அங்க தட்டுபட்டான். பொசுக்குன்னு முங்கி சரேல்னு தூக்குனா விடைச்சி விடச்சி மூச்சு முட்டுறான். நல்லவேளை அப்பதான் மூழ்கினான் போலயிருக்கு.
இந்த விசயம் அவன் அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கணும்… அப்புறம்…. அப்புறம்…
அப்புறம் வளந்து அவனாவே நீச்சல் படிச்சிகிட்டான்.
[புகைப்படம்:மெர்வின் ஆன்டோ]


4 பகிர்வுகள்:
அட.... நாமளும் குளத்து மேட்டருதான் பதிவா போட்டிருக்கேன்..
http://faaique.blogspot.com/2011/07/blog-post_10.html
//அட.... நாமளும் குளத்து மேட்டருதான் பதிவா போட்டிருக்கேன்..//
படித்தேன்.
பதற வைத்த அனுபவம்...
இராஜராஜேஸ்வரி
வருகைக்கு நன்றி.
பதறவைத்ததற்கு வருத்தங்கள்.
Post a Comment