சில நாட்களுக்கு முன் அலுவலக எண்ணில் தொடர்பு கொண்ட ஒரு பெண்.. ‘சார் நாங்க சென்னை ‘------‘ நிறுவனத்திலிருந்து பேசுகிறோம். இந்த எண்ணுக்குரிய உங்களை இந்த மாதத்தின் சிறந்த தம்பதிகளாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஒரு லட்சம் பரிசை நான் சொல்லும் முகவரியில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்றாள்.
ஒரு நிமிடம் வானில் பறக்கிற மாதிரி கனவு வந்து போனது.லட்ச ரூபாயாச்சே..
ஆனால் என்ன குழப்பம் என்றால் இந்த தொலைபேசி எண் என் அலுவலகத்திற்கானது. அது எப்படி, எப்போது தம்பதியானது என்று விவரம் தெரியாததால்.. போச்சே.. லட்ச ரூபா போச்சே..

0 பகிர்வுகள்:
Post a Comment