Friday, August 13, 2010

கைய புடி...கைய புடிடா..

[இது ஒரு மலையாள மேடை நிகழ்சியில் பார்த்தது.]


இந்த ஹோட்டல்ல பில்.ரொம்ப அநியாயமாயில்ல இருக்கு!

என்ன அநியாயம்.?

சப்பாட்டு செலவு அயிரத்து ஐநூறு ரூபா பொட்டிருக்கு, நான் சாப்பிடவே இல்லியே.வெளிலயில்ல போய் சாப்பிட்டேன்.

ஏன் சாப்பிடல.உனக்காக நாங்க பிரியாணி,சிக்கன், மீன் இன்னும் பல ஐட்டமெல்லாம் தினமும் ரெடியாக்கி வச்சோம். இன்னிக்கு சாப்பிடுவ, நாளைக்கு சாப்பிடுவன்னு டெய்லி வச்சிருந்தமே. நீ சாப்பிடாததுக்கு நாங்க என்ன பண்ண?

ஓ.... சரி போகட்டும் .இது என்ன மினரல் வாட்டர்.. நான் குடிக்கவே இல்லியே..

ஏன் குடிக்கலை. டெய்லி ஒரு கேன் தண்ணீர் வச்சிருந்தோம்..இன்னிக்கு குடிப்ப, நாளைக்கு குடிப்பேன்னு ரெடியா வச்சிருந்தோம் நீதான். குடிக்கலை கேள்வி கேட்காம முதல்ல பில்ல எடு. இல்லாட்டா போலீஸை கூப்பிடுவேன்.

ஓகோ அப்படி போகுதா..அப்ப எனக்கு நீ ஒரு இரண்டாயிரம் ரூபா குடு. இல்லேன்னா நானும் போலீஸை கூப்பிடுவேன்.

நானா? எதுக்கு?

நீ என் பெண்டாட்டி கையை புடிச்சி இழுத்தியே.

இல்லியே. நான் அப்படியெல்லாம் தொடமாட்டனே.

ஏன் தொடல. நீ இன்னிக்கு தொடுவ, நாளைக்கு தொடுவேன்னு ரெடியா இருந்தோம். நீதான் தொடல.

3 பகிர்வுகள்:

இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... ஆனா கவனம். நம்ம மதி மாதிரி ஆளுங்கக்கிட்ட போய் இப்படி கதைச்சுடாதீங்க...
(ஏதோ ஒரு படத்தில வடிவேலு நான் தான் கெடுத்தேன் என்று போய் நிற்பாரே...)

இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஜார்ஜ்.... இன்னைக்கு தொடுவான் நாளைக்கு தொடுவான்னு சிரிப்பை அடக்க முடியல

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More