பின்னால் ஒரு குரல் கேட்டது. “ போ அந்த லைட் தெரியிற வரை போயிட்டா பயமில்லை.’ யாரோ கூட வருகிறார்கள் போலிருக்கிறது.
தூரத்தில் வெளிச்சம்.பார்வை விட்டு விட்டுதான் தெரிந்தது. நடந்தேன்.குறுக்கே பாம்பொன்று சரக்கென்று போனது. திரும்பிப் பார்த்தால் பின்னாலும் பாம்பு.சுற்றி சுற்றி பாம்பு கூட்டம்.ஓவென்று அலறினேன்.சத்தம் உள்ளுக்குள் உறைகிறது.
கொத்த வந்த பாம்புகளை கையில் பிடித்து மாறி மாறி வீசினேன். அப்பொதுதான் கவனிக்கிறேன். மலைப்பகுதியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறேன்.பாம்புகளை பிடித்து எறிகிற வேகத்தில் தடுமாறி விழுந்து கீழே கீழே.... ஆழமான கடலுக்குள் மூழ்கி....கைகளை துழாவித் துழாவி நீந்த .மூச்சு முட்டுகிறது.
அந்த தவிப்பிலும் சட்டைக்குள் எதுவோ ஊர்வதை. உணர முடிகிறது.அசட்டை செய்து விட்டு நீந்தினேன்.
இப்போது லுங்கிக்குள் எதுவோ புரண்டது..... பாம்பு... பாம்புதான்.. ‘ஐயோ பாம்பு’ அலறியதில் விழிப்பு வந்து விட்டது. வியர்த்திருந்தது.கரப்பன் பூச்சி ஒன்று எழுந்து பறந்தது. வேகமாக மூச்சி வாங்கினேன்.
மனைவியும் பிள்ளைகளும் விலகி நின்று மிரண்டு போய் பார்த்தார்கள்.
பாழாய்ப் போன பகல் தூக்கம்.
Thursday, August 5, 2010
ஆகவே விழித்துக் கொள்ளுங்கள்
மூச்சு முட்ட ஓடிக்கொண்டிருந்தேன்.ஒத்தயடிப்பாதை. வயல் வெளியா.பரந்த காடா..புலப்பட வில்லை.பார்வை மெல்ல மெல்ல மங்கியது.
_____________

2 பகிர்வுகள்:
அருமையான குட்டிக்கதை...வாழ்த்துக்கள்
பாழாய்ப் போன பகல் தூக்கம்.
Post a Comment