Tuesday, August 3, 2010

ஐயய்யோ.. புடிங்க ..புடிங்க

வசதியான நண்பன் ஒருவனின் திருமணம்.

ஆலயத்தில் மூன்று குருவானவர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

உறவினர்களும் மப்பு வழியும் நண்பர்களுமாக நல்ல கூட்டம்.

எப்போதும் பான்ட் சட்டை அணியும் நண்பன் அன்று வழுவழுப்பான பட்டு வேட்டி சட்டை போட்டிருந்தான்.

தாலி கட்டும் [அணியும்] நேரம்.

வீடியோ ஒளிப்பதிவாளர்கள், புகைப்படகாரர்கள்,காமிரா இருந்த நண்பர்கள் என் அனைவர் பார்வையும் தாலிகட்டும் வைபவத்தில் நிலைத்திருக்க... [படம் பிடிக்க இடைஞ்சல் என்று மாப்பிள்ளை தோழர் கூட பின் தள்ளப்பட்டார்.].

எல்லா உறுதிமொழியும் வாங்கிய பின் ,தாலியை ஆசிர்வதித்து மணமகன் கையில் கொடுத்த குருவானவர்,அதை பெண் கழுத்தில் அணிவிக்கக் சொன்னார்.

தாலியை கையில் வாங்கிய மணமகன் சிறு குழந்தை எதற்கோ முழிக்குமே அதே மாதிரி முழித்தார்.
பெண்ணின் கழுத்தைக் சுற்றி தாலியை கொண்டு போனவர் "ஐயய்யோ.. புடிங்க ..புடிங்க' என்று கத்தினார்.

முதலில் யாருக்கும் எதுவும் புரிய வில்லை.ஆளாளுக்கு பதற... நல்லவேளை அருகில் நின்ற குருவானவர் நழுவிக்கொண்டிருந்த மாப்பிள்ளையின் வேட்டியை பிடித்துக் கொண்டார்.
__________________

5 பகிர்வுகள்:

இதுக்கு தான் பெல்ட் கட்டிருக்கனும்கிறது ;-)

அய்யோ அய்யோ, செம சிரிப்பு

நல்ல காமெடி

பெரும்பாலான தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவார்கள் , அணிவிக்க மாட்டார்கள்
லியோ சுரேஷ்

nalla comedy. appo neengo vedikai parthukonda irunteergal. kaapatha venama(manaththai............!)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More