"வேகமா போ.வண்டிய புடிக்கணும்"
"டிக்கட் எடுத்துகிட்டியா?"
"அதெல்லாம் ஆச்சி. ரோட்டைப்பார்த்து ஓட்டு."
"சரி எத்தனை மணிக்கு வண்டி "
"அஞ்சரைக்குள்ள வண்டி"
"அஞ்சரைக்கா. இன்னும் பத்து நிமிசம்தான் இருக்கு. கொஞ்சம் சீக்கிரமாவே கிளம்பியிருக்கலாமில்ல"
ஆக்சிலேட்டரை அழுத்தினேன்.
சேவியரையும்,விக்டரையும் ரயிலேற்றி விடவேண்டும்.சென்னைக்கு.
கார் முன் விளக்கை போட்டுக் கொண்டு,ஆரனை அழுத்திக்கொண்டு,கோட்டாறு பாரம் ஏற்றி இருக்கும் லாரிகளின் நெருக்கடியை தாண்டி... ஸ்டேசனை நெருங்க.. நல்லவேளை முதல் நடைமேடையில் ரயில் நின்றது.பதற பதற இறங்கி..ஓடி..எஸ் 3 ல் “ஏறு..ஏறு...ஏறு..” ஏறியதும்தான் 'அப்பாடா'என்று நிம்மதி வந்தது. கை காட்டுவதற்குள் ரயில் கிளம்பிற்று.
ஆசுவாசமாக வெளியேறி காரை ஸ்டார்ட் செய்த போது சேவியரிடமிருந்து போன் "உருப்படுவியாடா நீ" என்றான்.
வண்டி மாறிப்போச்சாம்

2 பகிர்வுகள்:
:)
nalla iruku
Post a Comment