Friday, July 30, 2010

இராத்திரி நேரத்தில் ...அந்தகுரல்

இரவு. நல்ல தூக்கத்திலிருந்தேன். ( இது கனவு மேட்டர் இல்ல ஜனங்களே.)

தொலைபேசி நிசப்தத்தை உடைத்த படி அலற.... அதை விட அலறலோடு நான் எழுந்து (வழக்கம் போல) ‘ஙே’ என விழித்தேன்.

சுதாரித்து போனை எடுத்தால் பதட்டத்துடன் ஒரு பெண் குரல். [கற்பனையை புடிச்சி கட்டுங்க]

“அண்ணே நான் மஞ்சுவுக்கு அம்மா பேசறேன். லைட்ட போட்டு எங்க வீட்டப் பாருங்க” என்றாள் பயந்த குரலில்.

எதிர் வீட்டுப் பெண்.கணவன் ஏதோ ஒரு பாலைவனத்தில். இவள்,இரண்டு குழந்தைகளுடன். துணைக்கு வயதான அப்பா.

“ஏன். என்னாயிற்று?”

“என்னன்னு தெரியலை.ஏதேதோ சத்தம் கேட்குது. அப்பா வேற இல்ல.பயமாயிருக்கு... பேயோ.. பிசாசோ..” தொண்டை அடைக்க குழறினாள்.

‘பேய்’ என்றதும் என் இதயதுடிப்பு எக்ஸ்டிரா லார்ஜ் ஆனது.

ஜன்னலை ஓசையில்லாமல் திறந்து அந்த வீட்டை நோட்டம் விட்டேன். [அதற்கு முன் ஒரு பாதுகாப்புக்காக வீட்டினரை எழுப்பி விட்டிருந்தேன்]

நிலவொளியில் தெரிந்த அந்த வீட்டைச் சுற்றி எந்த சலனமும் இல்லை

“ஒண்ணும் தெரியலை.லைட்டை போடுங்கப்பா” என்றான் மகன்.அவன் இருக்கிறான் என்ற தைரியத்தில் லைட்டைப் பொட்டேன்.சட்டென்று எதிர் வீட்டிலும் லைட் எரிந்தது. என்னைப்போலவே இருட்டில் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்களோ....

படபடவென்று ஓசையுடன் [பயந்தவன் பாடிட்டே போற மாதிரி] கதவைத் திறந்தேன்.பக்கத்து வீடுகளும் திறந்தன. வெளியே வந்தோம்.

அந்த பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.”மாடியில யாரோ சாகக் கிடக்கிறவன் மாதிரி... ஒரு மாதிரியா சத்தம் கேட்குது.என்னன்னு தெரியலை” அது என்ன ஓசை என்று அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. சொல்லிக் கொண்டிருக்கிற போதே அந்த சத்தம் கேட்டது.

ஓடி ஓடி களைத்து மூச்சிரைக்கிற மாதிரி.... ஹ்அ.. ஹ்அ... ஹ்அ... என்று இழுத்துபிறகு உயிர் போகும் அவஸ்தையில் கதறுவது மாதிரி ....ம்மாஆஆஆஅ....

சில்லென்று பயம் ஊசி மாதிரி பாய்ந்தது.

ஒருவாறாக மனதை திடப்படுத்திக் கொண்டு நாலைந்து பேராக சேர்ந்து பக்கத்து மாடிகளில் ஏறி இந்த மாடியை அலசினோம்.எதுவும் தென்படவில்லை. வீட்டுக்குள் ஒவ்வொரு அறையாக அலசியாயிற்று. வீட்டைச்சுற்றி படபடப்புடன் சலித்தாகி விட்டது. அருகே நின்ற மரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பறவை எழுந்து பறந்ததை தவிர எதுவும் அகப்படவில்லை. விடிவது வரை தேடியும் உறக்கம் தொலைந்ததை தவிர வேறெதும் புலனாக வில்லை.

பிறகு எப்படி அந்த சத்தம்.. ஒரே மர்மமாயில்ல இருக்கு..!

இரண்டு நாள் தொடர்ந்து [பயந்து பயந்து] கண்காணித்ததில் தெரிய வந்தது.மரத்தில் இருந்து பறந்து போனதே பறவை . அந்த ஆந்தைதான் அப்படி விநோதமாய் ஒலி எழுப்பியிருக்கிறது.

7 பகிர்வுகள்:

// இரண்டு நாள் தொடர்ந்து [பயந்து பயந்து] கண்காணித்ததில் தெரிய வந்தது //

ஆக மொத்ததுல மூணுநாள் தூக்கம் போயாச்சா?

என்ர இரவு நித்திரைக்கு ஆப்பு வைச்சிடிங்களே

அதென்ன உங்க வலைப்பக்கம் கூட மர்மமாவே டிசைன் பண்ணியிருக்கீங்க??

என்னவோ போங்க..

அய்யா... கொஞ்சம் வர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துடுங்க... வாசகர்கள் நொந்துடுவாங்க.

//ஆக மொத்ததுல மூணுநாள் தூக்கம் போயாச்சா?//
தோழி தூக்கம் போனா என்ன பயம் போயிருச்சில்ல.

ராவணா... இது உங்களுக்கு வச்ச ஆப்பு இல்ல.

ஆதவா.. வருக.. நன்றி.. எடுத்தாச்சி.[இதுவும் மர்மமா இருக்கோ?]

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More